Home> Business
Advertisement

Good News Indian Employees: 2022இல் 9.4% வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும், சம்பள உயர்வு இரட்டை இலக்கத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திறமைக்கான போர் மீண்டும் தொடங்கிவிட்டது என்றும், இது சம்பள உயர்வை அதிகரிக்கும்...

Good News Indian Employees: 2022இல் 9.4% வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும் என்று ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் இந்தியாவின் மூன்று துறைகளில் தான் சம்பள உயர்வு அதிகமாக இருக்குமாம். அவை எந்தெந்த துறைகள் தெரியுமா?

தொழில்நுட்பம் (technology), இணையவழி  வர்த்தகம் (ecommerce) ஐடி தொடர்புடையத் துறைகள் (IT-enabled services) என முக்கியமான மூன்று துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திறமைக்கான போர் மீண்டும் தொடங்கிவிட்டது என்றும், இது சம்பள உயர்வை அதிகரிக்கும் என்று ஐஏஎன்எஸ் (Indo-Asian News Service) தெரிவித்துள்ளது.

எனவே, 2022ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக, 9.4 சதவிகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக Aon கணக்கெடுப்பு (Aon survey) தெரிவிக்கிறது. "சராசரியாக 9.22 சதவிகித சம்பள உயர்வுக்கான திட்டம், வலுவான பொருளாதார மீட்பு மற்றும் மேம்பட்ட நுகர்வோர் உணர்வின் அடையாளம்" என்று இந்த அறிக்கை கூறுகிறது. 2021 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் சராசரியாக 8.8 சதவிகிதம் அளவிற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

READ ALSO | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!

"2021ம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோயால் சில துறைகளில் பொருளாதார அழுத்தங்கள் இருந்தாலும், பெரும்பாலான வணிகங்கள் 2022 க்குள் நிலைமை மாறிவிடும் என்று நம்புகின்றன. எனவே பணியாளர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும்" என்று IANS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
"பெரும்பாலான துறைகளில் நேர்மறையான உணர்வை நாங்கள் காண்கிறோம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையினால், அந்நிய நேரடி முதலீடு நாட்டிற்குள் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான பிரிவுகளில் நுகர்வோர் தேவை அதிகரித்து வருகிறது" என்று கூறப்படுகிறது.

"கோவிட் -19 இன் இரண்டாம் அலை இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிய போதிலும், இந்திய நிறுவனங்கள் கடினமான காலங்களிலும் நன்றாக செயல்பட்டுள்ளன" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் தொற்றுநோய் ஆபத்து தொடர்ந்தாலும், வணிக உணர்வு மற்றும் 2022 க்கான சம்பள கணிப்புகள் ஆக்கபூர்வமான வளர்ச்சியை நோக்கி தொழில்துறை செல்வதைக் காட்டுகிறது. தற்போது 2020 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருப்பதும் நம்பிக்கையளிக்கிறது.  

ALSO READ | வாகன ஓட்டுநர்களுக்கு நல்ல செய்தி: காலக்கெடு செப்டெம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More