Home> Business
Advertisement

EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் ஏற்றம்? உச்சநீதிமன்றத்துக்கு சென்ற விவகாரம்

EPS 95 Minimum Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் ஏற்றம்? உச்சநீதிமன்றத்துக்கு சென்ற விவகாரம்

EPS 95 Minimum Pension: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. இப்போது உச்சநீதிமன்றம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையில் நிவாரனம் வழங்கும் என நம்பப்படுகின்றது. இதை பற்றி விரிவாக காணலாம்.

EPF Subscribers: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் (Employee Pension Scheme 1995) கீழ் வரும் இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளுடன் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஊழியர் நலச் சங்கம் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி மாண்புமிகு தலைமை நீதிபதியிடம் தனது குறையை தெரிவித்தது.

இந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்தை பற்றி தெரிவித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியம் போதாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.15000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்த புதிய புதுப்பிப்புகளில் இன்னும் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. தற்போது பல ஓய்வூதியதாரர்கள் மாத ஓய்வூதியமாக 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை மட்டுமே பெறுவதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொகை வாழ்க்கையை நடத்த மிகவும் குறைவான ஒரு தொகை என்பது தெளிவான ஒரு கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு

Employee Pension Scheme

பல ஓய்வூதியதாரர்கள் (Pensioners) 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையிலான மிகக்குறைந்த ஓய்வூதியத்தை பெறுகிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்திய ஊழியர் சங்கம், இவ்வளவு குறைந்த ஓய்வூதியத்தில் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்துவது சாத்தியமில்லை என்பதை எடுத்துறைத்தது. இதுமட்டுமின்றி செலவு செய்து இதற்காக வழக்குகளை வாதாடும் சக்தியும் அவர்களுக்கு இருக்காது. ஆகையால், இது தொடர்பாக சங்கம் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர்களின் இந்த முக்கியமான கோரிக்கையை அரசாங்கம் கண்டிப்பாக பரிசீலனை செய்து இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக அரசாங்கம் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பணியில் இருந்து ஓய்வுபெறும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பணி ஓய்வு காலத்தை நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் கழிக்க முடியும். 

வயதான காலத்தில் ஆதாரமாக இருக்கும் ஓய்வூதியம் (Pension) வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இருக்க வேண்டுமே தவிர, வெறும் பெயரளவில் இருக்கக்கூடாது என்பதையும் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை ஓய்வூதியதாரர்களுக்கானது மட்டுமல்ல, இது சமூகத்திற்கும் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. ஆகையால் இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பணி ஓய்வின் போது கோடிகளில் பணம் பெற மாதா மாதம் EPF கணக்கில் எவ்வளவு பங்களிக்க வெண்டும்? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More