Home> Business
Advertisement

டிக்கெட் முன்பதிவில் பம்பர் தள்ளுபடி வழங்கும் IndiGo நிறுவனம்; முழு விபரம்

இண்டிகோ விமான நிறுவனம், சிறப்புச் சலுகையின் கீழ் விமான டிக்கெட்டுகள் முன்பதிவில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. அது குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

டிக்கெட் முன்பதிவில் பம்பர் தள்ளுபடி வழங்கும் IndiGo நிறுவனம்; முழு விபரம்

இண்டிகோ விமான நிறுவனம், சிறப்புச் சலுகையின் கீழ் டிக்கெட் புக்கிங்கில் பம்பர் தள்ளுபடியை விமான நிறுவனம் வழங்குகிறது. உண்மையில், விமான நிறுவனம் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குகிறது. அதாவது, நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், விமானத்தில் மலிவாகப் பயணம் செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.

விமான நிறுவனம்  வழங்கும் சிறப்பு சலுகை

உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. இதற்காக, www.goindigo.in என்ற விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் மூத்த குடிமக்கள் தள்ளுபடியின் கீழ் முன்பதிவு செய்ய வேண்டும். விமான நிறுவனம் இந்த சலுகைக்கு 'தி கோல்டன் ஏஜ்' என்று பெயரிட்டுள்ளது.

சலுகை காலம்

IndiGo நிறுவனம் வழங்கும் இந்த சலுகை 30 செப்டம்பர் 2022 வரையில் கிடைக்கும். இதில் விமான டிக்கெட்டுகளின் அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன்படி, மூத்த குடிமக்கள் செக்-இன் செய்யும் போது பிறந்த தேதிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அது எந்த ஒரு அரசாங்க அடையாளமாக இருக்கலாம்.

எவ்வளவு சாமான்களை எடுத்துச் செல்லலாம்?

இந்தச் சலுகையின் கீழ், மூத்த குடிமக்கள் பயணம் செய்யும் போது 15 கிலோ வரை செக்-இன் பேக்கேஜையும், 7 கிலோ வரையிலான கைப் பொருட்களையும் எடுத்துச் செல்லலாம். இது தவிர, சிற்றுண்டிகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சலுகையின் பலன் (IndiGo 6E Senior Citizen discount scheme) ஒரு வழி மற்றும் இரு வழி ஆகிய இரண்டிற்கும் செல்லுபடியாகும். இது தவிர, இண்டிகோவின் 6E சீனியர் சிட்டிசன் தள்ளுபடி திட்ட விமான டிக்கெட்டுகளில் நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம். தேவைப்பட்டால் ரத்து செய்யலாம். ஆனால் ஒரு முறை முன்பதிவு செய்தால், டிக்கெட்டை மாற்ற முடியாது.

மேலும் படிக்க | PPF: மத்திய அரசு மேற்கொண்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்

இணையத்தில் செக்-இன் செய்ய இயலாது

நீங்கள் 6E மூத்த குடிமக்கள் தள்ளுபடி திட்டத்தின் (6E Senior Citizen discount scheme) கீழ் விமானத்தை முன்பதிவு செய்தால், நீங்கள் இணையத்தின் மூலம் செக் இன் பார்க்க முடியாது. இது தவிர, விமான நிறுவனம் நிர்ணயித்த விதிமுறைகளின்படி விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More