Home> Business
Advertisement

8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு; முழு விவரம் இங்கே

கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு; முழு விவரம் இங்கே

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கேஸ் சிலிண்டர் (LPG Cylinder Hike) விலையை மாதம் தோறும் மாற்றி அமைக்கின்றன. அதன்படி பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25-ம் தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. 

ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?

இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்து தற்போது ரூ.875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.165 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எல்பிஜி விலையை எவ்வாறு சரிபார்ப்பது?
எல்பிஜி சிலிண்டரின் விலையை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், இதற்காக நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். இங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை வெளியிடுகின்றன. (https://iocl.com/Products/IndaneGas.aspx) இணைப்பில் உங்கள் நகரத்தின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நீங்கள் பார்க்கலாம்.

ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More