Home> Business
Advertisement

ALERT: April-June மாதங்களில் அரசாங்க வங்கிகளில் வியக்க வைக்கும் அளவில் Fraud Cases

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அரசு வங்கிகளில் ரூ .19,964 கோடி மதிப்பிலான மோசடி செய்யப்பட்டுள்ளது.

ALERT: April-June மாதங்களில் அரசாங்க வங்கிகளில் வியக்க வைக்கும் அளவில் Fraud Cases

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அரசு வங்கிகளில் (Government Banks) ரூ .19,964 கோடி மதிப்பிலான மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 2,867 வழக்குகள் பதிவாகியுள்ளன. செய்திகளின் படி, 12 வங்கிகளில், அதிகபட்சமாக 2,050 மோசடி வழக்குகள் SBI-ல் பதிவாகியுள்ளன.

இந்த மோசடி வழக்குகளுடன் (Fraud Cases) தொடர்புடைய தொகை சுமார் 2,325.88 கோடி ரூபாயாகும். பி.டி.ஐ செய்தியின்படி, பாங்க் ஆப் இந்தியா மதிப்பின் அடிப்படையில் மோசடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், பாங்க் ஆப் இந்தியாவில் 5,124.87 கோடி ரூபாய் மதிப்பிலான 47 மோசடி வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமை (RTI) இன் கீழ் கோரப்பட்ட தகவல்களால் இது தெரிய வந்துள்ளது.

RTI-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்த தகவல் கோரப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எண்ணிக்கையால் அதிக மோசடிகளை எதிர்கொண்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியா (BoI) மதிப்பின் அடிப்படையில் மோசடியால் அதிகம் பாதிக்கப்பட்டது.

இது தவிர, கனரா வங்கியில் 3,885.26 கோடி ரூபாய் மதிப்பிலான 33 மோசடி வழக்குகள், பேங்க் ஆப் பரோடாவில் 2,842.94 கோடி மதிப்பிலான 60 மோசடி வழக்குகள், இந்தியன் வங்கியில் 1,469.79 கோடி ரூபாய் மதிப்பிலான 45 மோசடி வழக்குகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 1,207.65 கோடி ரூபாய் மதிப்பிலான 37 மோசடி வழக்குகள், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 1,140.37 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்பது மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன.

ALSO READ: Tax Alert: வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத தொகை இருந்தால் 83% வரி கட்ட நேரிடலாம்!!

இந்த காலகட்டத்தில், இரண்டாவது பெரிய அரசு நடத்தும் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) 270.65 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், வங்கியில் மோசடி செய்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக இருந்தது.

மற்ற வங்கிகளைப் பற்றி பேசும்போது, ​​UCO வங்கியில் 831.35 கோடி ரூபாய் மதிப்பிலான 130 மோசடி வழக்குகள், செண்டிரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 655.84 கோடி ரூபாய் மதிப்பிலான 149 மோசடி வழக்குகள், பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் 163.3 கோடி ரூபாய் மதிப்பிலான 18 மோசடி வழக்குகள் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 46.52 கோடி ரூபாய் மதிப்பிலான 49 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவை வங்கிகளால் வழங்கப்பட்ட பூர்வாங்க புள்ளிவிவரங்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது. இவை மாறக்கூடும். மோசடியின் தொகையும் வங்கிகள் உண்மையில் இழந்த தொகையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் RBI தெளிவுபடுத்தியுள்ளது. 

ALSO READ: SBI: OTP அடிப்படையில் ATM-ல் பணம் எடுக்கும் முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்!!

Read More