Home> Business
Advertisement

முதன்முறையாக தனது லோகோவை மாற்றிய NOKIA! ஏன் தெரியுமா?

நோக்கியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய லோகோ 'NOKIA' என்கிற வார்த்தையை உருவாக்கும் ஐந்து வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது.   

முதன்முறையாக தனது லோகோவை மாற்றிய NOKIA! ஏன் தெரியுமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நோக்கியா (NOKIA.HE) நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் முதன்முறையாக மாற்றப்போவதாக அறிவித்து, ஒரு புதிய லோகோவை வெளியிட்டது. NOKIA நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய லோகோ 'NOKIA' என்கிற வார்த்தையை உருவாக்கும் ஐந்து வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது.  இதற்கு முன்னர் நீல நிறத்தில் இருந்த பழைய லோகோவை நிறுவனம் நீக்கிவிட்டது.  இப்போதெல்லாம் நாங்கள் ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாக மாறி இருக்கிறோம் என்று இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.  பார்சிலோனாவில் திங்களன்று தொடங்கி மார்ச் 2 வரை நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸுக்கு முன்னர் இதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 2000 ரூபாயை கள்ள நோட்டா என்று பார்ப்பது எப்படி? - ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

fallbacks

ரீசெட், அக்ஸலரேட் மற்றும் ஸ்கெல் ஆகிய மூன்று தந்திரங்களை பெக்கா லண்ட்மார்க் செயல்படுத்தியுள்ளார்.  இதில் ரீசெட் நிலை முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் நிலையை தொடங்கப்போவதாக பெக்கா கூறியுள்ளார்.  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்யும் நோக்கியா தற்போது தனது வணிகத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றி கொண்டுப்போவதில் கவனம் செலுத்தி வருகின்றது.  

fallbacks

தனது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பெக்கா கூறுகையில், நிறுவனத்தில் கடந்த ஆண்டு 21% வளர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம், 2 பில்லியன் யூரோக்கள் ($2.11 பில்லியன்) பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.  பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நோக்கியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து தனியார் 5G நெட்வொர்க்குகள் மற்றும் தானியங்கி தொழிற்சாலைகளுக்கான கியர்களை விற்பனை செய்கின்றன.  தொழிற்சாலை ஆட்டோமேஷன் மற்றும் டேட்டாசென்டர்களை நோக்கிய நோக்கியாவின் நகர்வு, மைக்ரோசாப்ட் (MSFT.O) மற்றும் அமேசான் (AMZN.O) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நல்ல வளர்ச்சியை கொண்டிருப்பதாக பெக்கா கூறுகிறார்.

மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More