Home> Business
Advertisement

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி! புதிய சேவைகள் அறிமுகம்!

EPFO-ன் புதிய ஆன்லைன் சேவை, ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று இபிஎஃப்ஓ நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.  

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி! புதிய சேவைகள் அறிமுகம்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் தனது உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.  இந்த ஆன்லைன் சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தபடியே சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  மேலும் இந்த ஆன்லைன் சேவை ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று இபிஎஃப்ஓ நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

இபிஎஃப்ஓ-ன் ஆன்லைன் சேவைகள்:

1) ஓய்வூதிய கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பித்தல் (இபிஎஃப்ஓ உறுப்பினர் போர்டல்/ உமாங் ஆப் மூலம்).
2) ஓய்வூதிய பாஸ்புக்கை ஆன்லைனில் பார்ப்பது.
3) டிஜி-லாக்கரில் இருந்து ஓய்வூதிய கட்டண உத்தரவை (பிபிஓ) டவுன்லோடு செய்தல்.
4) மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்து டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பித்தல்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு ஆகியவை இந்தியாவில் உன்மங் செயலியை உருவாக்கியுள்ளது.  உமாங் செயலி மூலம் இந்திய குடிமக்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை எவ்வித சிரமும், அலைச்சலுமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

fallbacks

மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களின் இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான அடிப்படை சம்பளத்தை அதிகபட்சமாக ரூ.15,000 என நிர்ணயித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில்  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த சம்பள வரம்பை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.  இந்த வழக்கு தற்போது சப் ஜூடிஸில் உள்ளது, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  ஊழியர்களின் ஓய்வூதியத்தை அவர்கள் இறுதியில் பெறக்கூடிய அதிக சம்பளத்தை வைத்து கணக்கிடலாம் என்று கோரப்பட்டுள்ளது.  இந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கு பல மடங்கு  இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும்.  ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டியது அவசியம் மற்றும் ஊழியர்கள் 20 ஆண்டுகால சேவையை முடித்த பிறகு அவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More