Home> Business
Advertisement

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன. 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன. 

இதன் ஒரு பகுதியான சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 27.02.2020 அன்று காலை 9.30 மணி அளவில் இலவச ஒரு நாள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளது. 

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண்/ பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்’ திட்டடங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டடங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், 
கைபேசி எண்கள்: 8668101638 / 9445376146

Read More