Home> Business
Advertisement

என்னை மாதிரி பணக்கார பெண் உலகத்திலேயே இருந்ததில்ல! மார் தட்டும் சீனா குபேர ராணி

Empress Wu richest woman: உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண், யார் தெரியுமா? இந்த பெண்ணைப் போன்ற செல்வ சீமாட்டிகள் வேறு யாருமே கிடையாது

என்னை மாதிரி பணக்கார பெண் உலகத்திலேயே இருந்ததில்ல! மார் தட்டும் சீனா குபேர ராணி

உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண், யார் தெரியுமா? இந்த பெண்ணைப் போன்ற செல்வ சீமாட்டிகள் வேறு யாருமே கிடையாது.
பெரும் பணக்காரர்களைப் பற்றி நாம் பேசும்போது, ​​பெரிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள், மிகவும் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருப்பவர்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துபவர்களைப் பற்றி நினைத்துக் கொள்வோம்.

உலகப் பணக்காரர் எலோன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் பலரின் பெயர்கள் தான் முதலில் நினைவுக்கு வரும்.

ஆனால், மேலே குறிப்பிட்டவர்களின் செல்வத்தை விட அதிகமான செல்வம் இருந்தவர்கள் பலர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். அதிலும், உலகின் மிகப் பெரிய பணக்காரிகளில் ஒருவர் சீனாவின் பேரரசி வூ.

மேலும் படிக்க | World's Richest Cricketer: உலகின் முதல் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்!

சீனப் பேரரசி வூ தான், பூமியில் வாழ்ந்த பணக்கார பெண்மணி. அவரது நிகர மதிப்பு USD 16 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது எலோன் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெஃப் பெசோஸ் மற்றும் பிறரின் நிகர மதிப்பை விட அதிகம். Money.com படி, பேரரசி வூ டாங் வம்சத்தைச் சேர்ந்தவர் மற்றும் வரலாற்றில் பணக்கார பெண் அரசி ஆவார்.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, பேரரசி வூ மிகவும் தந்திரமான மற்றும் இரக்கமற்ற நபராக இருந்தார், மேலும் அவர் அதிகாரத்தில் இருப்பதற்காக தனது சொந்த குழந்தைகளைக் கூட கொன்றதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. பேரரசி வூ உயர் கல்வி கற்றவர் மற்றும் அவரது புதிரான வாழ்க்கைக் கதை பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - PG/ ஹாஸ்டல் தங்கும் விடுதிகளுக்கும் இனி 12% ஜிஎஸ்டி! விலை உயரும் அபாயம்!

ஃபேன் பிங்பிங் நடித்த எம்ப்ரஸ் ஆஃப் சைனா (Empress of China) என்ற தொலைக்காட்சித் தொடர் அப்படிப்பட்ட ஒன்று. பேரரசி வூ சுமார் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார், மேலும் அவர் சீன சாம்ராஜ்யத்தை மத்திய ஆசியாவில் விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

மகாராணி வூ, சீனாவை ஆட்சி செய்தபோது, சீனப் பொருளாதாரம் தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்துடன் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்தது என்று தி சைனா ப்ராஜெக்ட் தெரிவித்துள்ளது. மகாராணி தனது வாழ்நாளில் மட்டுமல்ல, மரணத்திற்குப் பிறகும் பல்வேறு அதிகாரப்பூர்வ பட்டங்கள் பெற்றவர் பேரரசி வூ.

எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர்கள், ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 150 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு சுமார் 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுடன், பேரரசி வூவின் 16 டிரில்லியன் சொத்துக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

மேலும் படிக்க - GST வரி குறைப்பு! இனி இந்த பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More