Home> Business
Advertisement

இந்த பொருட்களை பணமாக கொடுத்து வாங்க வேண்டாம்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

Income tax department notice: நீங்கள் சில பொருட்களை பணமாக கொண்டு வாங்கும் பழக்கத்தை கொண்டு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வருமான வரித் துறையின் நோட்டீஸ் வரலாம்.  

இந்த பொருட்களை பணமாக கொடுத்து வாங்க வேண்டாம்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

Income tax department notice: தற்போது டிஜிட்டல் உலகத்தில் 1 ரூபாய் முதல் 1 லட்சம் வரை UPI மூலம் அனுப்பி வருகிறோம். இது நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல், நமது தேவைகளை உடனடி பூர்த்தி செய்கிறது. இருப்பினும், நமது கைகளில் இருந்து பணமாக கொண்டு எந்த ஒரு பொருட்களையும் வாங்கினால் அதன் கணக்கு நமக்கு தெரியும். ஆன்லைனில் அனுப்பும் போது எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கு செய்வதில்லை. இதனால் சில சமயங்களில் அதிகமாக செலவு செய்துவிடுகிறோம். இருப்பினும் சில இடங்களில் பணமாக பரிவர்த்தனை செய்வது நல்லது இல்லை. வருமான வரி நோட்டீஸ் வரவும் வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!

வங்கியில் பணம் டெபாசிட்: வருமான வரித்துறை விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக வங்கியில் டெபாசிட் செய்தால், அதற்கான ஆதாரத்தை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமான ஒன்று. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரி நோட்டீஸ் வரலாம். இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

10 லட்சத்திற்கு எஃப்டி கணக்கு: ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட் கணக்குகளில் ரூ.10 லட்சம் பணத்தை நீங்கள் டெபாசிட் செய்தால் உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். அப்படி வரும் பட்சத்தில் நீங்கள் அந்த பணத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, எப்போதும் பணத்தை காசோலை மூலம் FDல் டெபாசிட் செய்வது நல்லது. .

சொத்து தொடர்பான பரிவர்த்தனை: சொத்துக்காக ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை நடந்தால், சொத்து பதிவாளர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரித்துறை உங்களின் வருமான ஆதாரத்தை பற்றி கேட்கலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்களை ரொக்கமாகச் செலுத்தி வாங்கினாலும், உங்களிடம் கேள்விகள் கேட்கப்படலாம்.

கிரெடிட் கார்டு மூலம் கடன்: ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில்லை மொத்தமாக ரொக்கமாக செலுத்தினால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என வருமான வரித்துறைக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். இது தவிர, கிரெடிட் கார்டு பில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வந்தால், அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More