Home> Business
Advertisement

FD முதலீடுகளில் அதிக வட்டி பெற... ஜூன் 30 வரை மட்டுமே வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க..!!

Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.

FD முதலீடுகளில் அதிக வட்டி பெற... ஜூன் 30 வரை மட்டுமே வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க..!!

Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. நீங்கள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட விரும்பினால், சரியான நேரத்தில் முதலீடு செய்யுங்கள். இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவை ஜூன் 30 வரை சிறப்பு FD திட்டத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில், நீங்கள் SBI வழங்கும் சிறப்பு FD திட்டமான அமிர்த கலசம் (Amrit Kalash) திட்டத்தில் 30 செப்டம்பர் 2024 வரை முதலீடு செய்யலாம்.

இந்தியன் வங்கியின் சிறப்பு திட்டம்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 300 மற்றும் 400 நாட்களுக்குகான FD முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. இந்த வருடம் ஜூன் 30, 2024 வரை Ind Super 400 மற்றும் Ind Supreme 300 நாட்களுக்கான FD திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

Ind சூப்பர் 400 நாட்களுக்கான FD திட்டம்  (Ind Super 400 days)

இந்தியன் வங்கியின் இந்த சிறப்பு FD என்பது Callable FD. அதாவது இதில் நீங்கள் தேவைப்பட்டால், முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் எடுக்கும் வசதி கிடைக்கும். இந்தியன் வங்கியின் Ind Super FD 400 days திட்டத்தில் ரூ.10,000 முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம் (Investment Tips). இந்திய வங்கிகள் இப்போது பொது மக்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 8.00% வட்டி வழங்குகின்றன.

Ind சூப்பர் 300 நாட்களுக்கான FD திட்டம் (Ind Super 300 days)

இந்தியன் வங்கியின் சிறப்பு திட்டமான Ind Super 300 days என்னும் திட்டம் ஜூலை 1, 2023 அன்று தொடங்கப்பட்டது. 300 நாட்களுக்கு இந்த FDயில் ரூ.5000 முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இதற்கு வங்கி 7.05 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரை வட்டி தருகிறது. இந்தியன் வங்கி இப்போது பொது மக்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55% மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டம்

ஐடிபிஐ வங்கி தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத்தொகையை வழங்குகிறது. IDBI வங்கி 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. இது 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த சிறப்புத் திட்டம் 30 ஜூன் 2024 வரை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

IDBI உத்சவ் சிறப்பு 400 நாட்கள் FD திட்டம் (IDBI Utsav Special 400 days FD)

ஐடிபிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், ஜூன் 30, 2024 வரை உத்சவ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஐடிபிஐ வங்கி, 444 நாட்கள் எஃப்டி திட்டத்தில் வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு  7.25% வட்டியை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் இந்த FD முதலீட்டில் இருந்து முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறவும் மூடவும் வங்கி அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..

IDBI உத்சவ் FD திட்டம் 375 நாட்கள் (IDBI Utsav 375 days FD)

ஐடிபிஐ வங்கி 375 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்களுக்கு எஃப்டியில் 7.10% வட்டி அளிக்கிறது. இந்த FD முதலீட்டில் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அல்லது மூடுவது போன்ற விருப்பத்தையும் வங்கி வழங்குகிறது.

IDBI உத்சவ் 300 நாட்களுக்கான FD திட்டம் (IDBI Utsav 300 days FD)

ஐடிபிஐ வங்கி 300 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 300 நாட்களுக்கு எஃப்டிக்கு 7.05% வட்டி அளிக்கிறது. இந்த FD பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறவும் அனுமதிக்கிறது.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD திட்டம்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு FD முதலீடுகளுக்கு அதிகபட்சமாக 8.05 சதவீதம் வட்டி கிடைக்கும். வங்கி 222 நாட்களுக்கான FD முதலீடுகளுக்கு 7.05 சதவீத வட்டியையும், 333 நாட்களுக்கான FD முதலீடுகளுக்கு 7.10 சதவீத வட்டியையும், 444 நாட்களுக்கான FD முதலீடுகளுக்கு 7.25 சதவீதத் வட்டியையும் வழங்குகிறது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.05 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.

மேலும் படிக்க | ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More