Home> Business
Advertisement

கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? உடனே இதை பண்ணுங்க

LPG Subsidy Ujjwala Yojana : உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த நிதியாண்டில் ரூ.300 உயர்த்தப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.

கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? உடனே இதை பண்ணுங்க

Pradhan Mantri Ujjwala Yojana LPG Cylinder : இன்று சர்வதேச மகளிர் தினம் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு தற்போது மிகப் பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது எல்பிஜி சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மீண்டும் ஓராண்டு காலத்திற்கு மோடி அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் அடுத்த 31 மார்ச் 2025 வரை எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெறுவார்கள். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சிலிண்டருக்கு ரூ.300 என்ற மானியத்தை வழங்கும், மேலும் இந்த திட்டம் மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மானியம் வழங்குவதால், அரசுக்கு கூடுதலாக ரூ.12000 கோடி சுமை ஏற்படும் என்றும், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31 வரை மலிவான எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும் :
கடந்த ஆகஸ்ட் 29, 2023 அன்று, எல்பிஜி விலையில் உயர்வை கண்ட பொதுமக்கள் எல்பிஜி சிலிண்டர்களில் மீண்டும் மானியம் வழங்க மோடி அரசாங்கம் முடிவு செய்து 31 மார்ச் 2024 வரை நீட்டித்தது. ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன நிலையில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முடிவு மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகாசிவராத்திரிக்கு மெகா பரிசு கொடுத்த மத்திய அரசு! ஊழியர்களின் அகவிலைப்படி 50% ஆக உயர்வு!

PM உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.603க்கு சிலிண்டர் கிடைக்கும் :
பொது மக்கள் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.903 செலுத்த வேண்டும். அதேசமயம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு அரசாங்கம் 300 ரூபாய் மானியமாக வழங்கி, இனி PM உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் (Pradhan Mantri Ujjwala Yojana) எல்பிஜி ரீஃபில் செய்ய ரூ.603 மட்டுமே செலுத்த வேண்டும்.

உஜ்வாலா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
* உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
* வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். 
* இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான தகுதி :
எஸ்.சி, எச்.டி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டத்திற்கு கீழ் பயன்பெறும் பெண்கள், தேயிலை தோட்ட பழங்குடியின பெண்கள், வனப்பகுதியில் வசிக்கும் பெண்கள், தீவு மற்றும் ஏரி தீவுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் 14 புள்ளிகள் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும்.

மேலும் படிக்க | 10 நிமிடத்தில் பான் கார்டு ரெடி..! ஆன்லைனில் இலவசமாக பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More