Home> Business
Advertisement

Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன்

Chandrababu Naidu Family Net Worth: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கும், அவரது குடும்ப சொத்துக்கும் என்ன சம்பந்தம்?

Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன்

Chandrababu Naidu Family Net Worth: இன்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அவர் முதல்வராகவுள்ளார். இதுமட்டுமின்றி மத்தியில் எண்டிஏ ஆட்சி அமைக்கவும் அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். 

டிடிபி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தற்போது அதிர்ஷ்டம் உச்சத்தில் உள்ளது என்றே கூற வேண்டும். அவர் ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஒரு வலுவாக கம்பேக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் கிங்மேக்கராகவும் மாறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளுக்கும், அவரது குடும்ப சொத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவில் காணலாம். 

சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் நிகர மதிப்பு

சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் நிகர மதிப்பு 12 நாட்களில் ரூ.1,225 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இதை கேட்க மிக ஆச்சரியமாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மை. மற்றொரு ஆச்சரியமான விஷடம் என்ன என்றால், அவரது குடும்ப நிகர மதிப்பின் இந்த ஆச்சரியமான அதிகரிப்புக்குப் பின்னால், இதன் காரணமாக இருப்பது ஒரே ஒரு பங்கு (Equity Share) மட்டுமே!!

ஒரு பங்கின் மூலம் கோடிகளில் வருமானம்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி ஒரு நிறுவனத்தின் பங்குகளை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்தது. சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சியும் வெற்றி பெற்ற செய்தி வந்தவுடன், நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ( Heritage Foods) பங்குகள் ராக்கெட்டாக மாறி வேகமாக உயரத் தொடங்கின. இந்த பங்குகளில் தொடர்ச்சியான அப்பர் சர்க்யூட் உள்ளது.  ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கின் அபரிமிதமான ஏற்றத்தால் பங்கு இதுவரை இல்லாத அதிகபட்ச அளவையும் (ஆல் டைப் ஹை) முறியடித்தது. 

ஜூன் 10 அன்று, ஹெரிடேஜ் ஃபுட் பங்குகள் 100 சதவீதம் உயர்ந்து ரூ.727.35 ஆக இருந்தன. இந்தப் பங்கின் விலை 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. 23 மே 2024 அன்று ரூ 354.50 இல் முடிவடைந்த பங்கு, 10 ஜூன் 2024 அன்று ரூ 727 ஐத் தாண்டியது. இந்நிறுவனத்தின் பங்குகள் 5 நாட்களில் 70 சதவீதம் உயர்ந்து 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளன. 

Heritage Foods நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது

ஹெரிடேஜ் குழுமம் 1992 இல் சந்திரபாபு நாயுடுவால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பால், சில்லறை வியாபாரம் மற்றும் விவசாய பிரிவுகளில் செயல்படுகிறது. இந்நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்தது. என் சந்தபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் ப்ரொமோட்டர்களில் ஒருவராக உள்ளார். இந்நிறுவனம் பால், தயிர், நெய், பனீர், சுவையூட்டும் பால் போன்ற பால் பொருட்களை விற்பனை செய்கிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் நாட்டின் 11 மாநிலங்களில் வர்த்தகம் செய்து வருகிறது.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: டிஏ உயர்வால் அதிகரிக்கும் ஊதியம்... விரைவில் 5 வேலை நாட்கள்?

6 நாட்களில் கோடீஸ்வரரான பேரன்

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தில் நாயுடு குடும்பம் 35.7 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி நாராவுக்கு அதிகபட்சமாக 24.37 சதவீத பங்குகள் உள்ளன. மகன் நாரா லோகேஷ் 10.82 சதவீத பங்குகளை வைத்துள்ளார். 0.06 சதவீத பங்குகள் அவரது 9 வயது பேரன் தேவான்ஷிடம் உள்ளது. 

தேர்தல் முடிவுகளுக்கு பின், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வேகமாக உயர்ந்ததையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷ் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அவரது மனைவி மற்றும் மகனின் நிகர மதிப்பும் 6 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. மே 23 அன்று இவர்கள் இருவரின் பங்குகளின் மதிப்பு ரூ.1100 கோடியாக இருந்தது. கடந்த 10 நாட்களில் இது ரூ.2300 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் உயர்வு காரணமாக ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.2400 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3700 கோடியில் இருந்து ரூ.6136 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More