Home> Business
Advertisement

நோ கிளைம் போனஸ் பற்றிய இந்த முக்கியத் தகவல்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்!

No claim bonus : வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீடு தொடர்பான தகவல்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்கு நன்மையைத் தரும்...

நோ கிளைம் போனஸ் பற்றிய இந்த முக்கியத் தகவல்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்!

பயணம் செய்வது என்பது இன்று மிகவும் எளிதாகியிருப்பதற்குக் காரணம் வாகனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வசதி என்று சொன்னால் அது மிகவும் சரியானது. இரு சக்கர வாகனங்கள், கார் என பல்வேறுவிதமான வாகனங்கள் வைத்திருப்பவர்களும் காப்பீடு செய்திருப்பதன் முக்கியத்துவத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

அதிலும், நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீடு தொடர்பான தகவல்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்கு நன்மையைத் தரும். வாகன காப்பீடு செய்தவர்கள், ஒரு ஆண்டு முழுவதும் காப்பீட்டுத் தொகையை கோரும் நிலை வராவிட்டால், அவர்களுக்கு, காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் போனஸ் (No claim bonus) கிடைக்கும். தொடர்ந்து அவர்கள் இந்த காப்பீட்டின் பலன்களை பயன்படுத்தாவிட்டால், இந்த போனஸ் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வரும். அதாவது அதிகபட்சம் 50% வரை காப்பீட்டு ப்ரீமியத்தில் போனஸ் சேர்ந்துவிடும்.

இந்த நிலையில் கிளைம் ஏதும் வாங்காத வாடிக்கையாளர்கள், இப்போது இருக்கும் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், காப்பீட்டு நிறுவனத்தை அனுகி நோ கிளைம் போனஸ் சான்றிதழ் (No Claim Bonus Certificate) பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சான்றிதழை, புதிதாக வேறு கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்து, புதிய வாகனத்திற்காக வாங்கும் காப்பீட்டின் பிரிமியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு தள்ளுபடி புதிய காரின் காப்பீட்டிற்கும் கிடைக்கும்.

ஆனால், உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் காப்பீடு எடுக்கும்போது, காருக்கான காப்பீட்டு கழிவான No claim bonus எனப்படும் போனஸை அனுபவிக்க முடியாது. ஏனென்றால், இந்த போனஸ் (No claim bonus) என்பது காருக்கானது அல்ல, காரின் உரிமையாளரின் பொறுப்பான நடத்தைக்காக கொடுக்கப்படுவது.

அதனால் தான், காரின் உரிமையாளராக இருக்கும் நீங்கள் கோராத காப்பீட்டுத் தொகைக்கான No claim bonus உங்களுக்கு கிடைபப்தற்காக, நோ கிளைம் போனஸ்ஆவணத்தை காப்ப்பீடு நிறுவனம் கொடுக்கிறது. இதை பயன்படுத்தி, புதிய காருக்கும் குறைவான பிரீமியத்தை செலுத்தலாம்.

எனவே, உங்களுக்குக் கிடைத்த நோ கிளைம் போனஸை நீங்கள் மட்டுமே, அதுவும் உங்கள் பெயரில் கார் வாங்கும்போது பயன்படுத்தமுடியும். நீங்களும் நித போனஸை பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.

மேலும் படிக்க | டிராவல் இன்சூரன்ஸ் இவ்வளவு நல்லதா? இத்தனை நாள் தெரியாமா போச்சே? ப்ரீமியம் எவ்வளவு?

No claim bonus சில குறிப்புகள்

நோ கிளைம் போனஸ் என்பது காருக்கு அல்ல, காரின் உரிமையாளருக்கானது
காரின் உரிமையாளருக்குத் சொந்தமாது நோ கிளைம் போனஸ்
புதிய வாகனத்தை உங்கள் பெயரில் வாங்கும் போது இந்த போனஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .  

நோ க்ளைம் போனஸ் என்பது கார் வைத்திருப்பவருக்கு கிடைக்கும் வெகுமதி ஆகும். ஆனால், பாலிசிதாரர் தனது இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் நோ க்ளைம் போனஸை சேர்த்தால் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும்.

’நோ கிளைம் போனஸ்’ உதாரணம்
 

உங்கள் காரை 2021 ஆம் ஆண்டில் காப்பீடு செய்து, காப்பீடு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு வருடமாக எந்த விதமான காப்பீட்டுக் கோரிக்கையும் வைக்காவிட்டால், 2022 இல் மீண்டும் காப்பீடு செய்தபோது, ​​காப்பீட்டு நிறுவனம், உங்களது வாகனகாப்பீட்டு பிரீமியத்திற்கு 10 சதவிகிதம் குறைவாகவே வசூலிக்கும். அதாவது 5000 ரூபாய் பிரீமியம் என்றால், அதன் 10 சதமான 500 ரூபாய் கழித்துக் கொள்ளப்பட்டு 4500 ரூபாய் மட்டுமே ப்ரீமியம் வசூலிக்கப்படும்.

இரண்டாம் ஆண்டு காப்பீட்டைப் பெற்ற பிறகும் காப்பீட்டுத் தொகையை அந்த ஆண்டு முழுவதும் அதைக் கோரவில்லை என்றால், அடுத்த பாலிசியில் தள்ளுபடி 20 சதமாக அதிகரிக்கும். இப்படி அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை காப்பீட்டு நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு நோ கிளைம் போனஸ் கொடுக்கும்.

மேலும் படிக்க | மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More