Home> Business
Advertisement

Salaried Class மக்களின் முக்கிய 5 நியாயமான எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்?

Budget 2024: பல சமயங்களில் பட்ஜெட் உரைக்குப் பின்பு மகிழ்ச்சி பொங்கும், சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முழுமையான விவரங்களை புரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும், தேடலும் அதிகரிக்கும்.

Salaried Class மக்களின் முக்கிய 5 நியாயமான எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்?

Budget 2024: நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக பட்ஜெட் தினம் என்பது அனைவருக்கும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டும் தினமாக இருந்து வருகின்றது. நடுத்தர மக்கள், தொழில்துறையினர், சம்பள வர்க்கக்த்தினர், சாமானியர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப், மாணவர்கள், மூத்த குடிமக்கள் என பலதரப்பட்ட மக்களும் பல வித அறிவிப்புகளுக்காக பட்ஜெட் தினத்தன்று ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

இது ஒரு உணர்வுபூர்வமான தினமாகவும் கருதப்படுகின்றது. பல சமயங்களில் பட்ஜெட் உரைக்குப் பின்பு மகிழ்ச்சி பொங்கும், சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முழுமையான விவரங்களை புரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும், தேடலும் அதிகரிக்கும். இப்படி பட்ஜெட் என்பது நாட்டின் அனைத்து மக்களையும் ஒரே புள்ளியில் கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமைகின்றது.

இந்த ஆண்டும் பட்ஜெட் மீது பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. எண்டிஏஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் அதிக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பள வர்க்கத்தினர் பலவித சலுகைகள் மற்றும் நிவாரணங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான பல அறிவிப்புகள் வெளியாகும் என்று ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. 

சம்பள வர்க்கத்தினரும், நடுத்தர வர்க்க மக்களும் இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா? இவற்றைப் பற்றி இங்கே காணலாம். 

அடிப்படை வரி விலக்கு வரம்பில் மாற்றம்

அடிப்படை வரி விலக்கு வரம்பில் (Basic Exemption Limit) பழைய வரி முறையில் 2014-15 ஆம் நிதியாண்டில் தான் இதற்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்து சுமார் பத்து வருடங்களாக இதில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இந்த பத்து வருடங்களில் சம்பளம் வாங்கும் வர்க்கத்தினரின் மாத ஊதியம் அதிகரித்துள்ளது. ஆனால் விலக்கு வரம்பு அதே அளவில் தான் உள்ளது. ஆகையால் அரசாங்கம் இந்த முறை இந்த வரி விலக்கு வரம்பை மாற்றி பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளில் விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
80C வரம்பில் மாற்றம்

சமீபத்திய கொள்கை மாற்றங்கள் புதிய வரிமுறை பக்கம் மாறுவதற்கு பரிந்துரைக்கும் வகையில் இருந்தாலும், அதிக வரி விலக்கு மற்றும் நிவாரணங்கள் காரணமாக பெரும்பாலான வரி செலுத்துவோர் பழைய வரி முறையை (Old Tax Regime) விரும்புகிறார்கள். அடிப்படை வரி விலக்கு வரம்பை போலவே பழைய வரி முறையின் கீழ் 80சி வரம்பு இதற்கு முன்னர் 2014-15 நிதி ஆண்டில் தான் மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி அதிகமாகியுள்ளது . இது சாமானியர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சம்பள உயர்வுடன் பணவீக்கத்துக்கு மத்தியில் எல்ஐசி, வருங்கால வைப்பு நிதி, சந்தை இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள், செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், நிரந்தர வைப்புத் தொகை போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதில் இந்த பிரிவு உறுதியாக உள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு 80சி விலக்கு வரம்பை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என சம்பள வர்க்கத்தினர் விரும்புகிறார்கள்.

ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்

2018 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வரிவிதிப்பு முறைகளில் சில பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. போக்குவரத்தூக் கொடுப்பனவு, மருத்துவ செலவுகளுக்கான கட்டணங்கள் ஆகியவை 40,000 ரூபாய்க்கான நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனுடன் (Stanard Deduction) மாற்றப்பட்டன. அதாவது இந்த செலவுகளுக்கான பில்களை அளிக்க வேண்டாம் என்றும் இவற்றுக்கு ஒரு நிலையான விலக்கு அளிக்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோ

2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த வரம்பு 50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இந்த வசதி புதிய வரி முறையை (New Tax Regime) தேர்ந்தெடுப்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை வரி செலுத்துவோர் (Taxpayers) பாராட்டினார்கள். எனினும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷனின் அளவை 50,000 ரூபாயிலிருந்து 70,000 அல்லது 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை இந்த ஆண்டு வரி செலுத்துவோர் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.

மூலதன ஆதாய வரி

சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு, மூலதன ஆதாய வரி (Capital gains tax)குறைவது உடனடி சேமிப்பாக மாற்றப்படாது. நமது நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் பத்திரச் சந்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  முன்னதாக, பட்டியலிடப்பட்ட ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் நீண்ட கால மூலதன ஆதாயங்களின் விற்பனைக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. எனினும், 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1 லட்சத்திற்கு அதிகமான மூலதன ஆதாயங்களுக்கான வரி முறை அறிமுகமானது. கடந்த சில ஆண்டுகளாக பங்குச் சந்தையில் வலுவான வளர்ச்சி பல பங்குகள் மற்றும் முதலீட்டு அலகுகளில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது. ஆகையால், மூலதன ஆதாய வரிக்கான வரம்பை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்துவது, சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப வரியை பராமரிக்கவும், முதலீட்டாளர்களின் வரிச்சுமையை குறைக்கவும் உதவும் என கருதப்படுகின்றது.

வீட்டுக் கடனுக்கான வட்டி

சொந்த வீடு என்பது பலரது கனவாக உள்ளது. பலர் இதற்காக வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். கடந்த ஆண்டுகளில் சொத்து மதிப்புகள் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதங்களும் உயர்ந்துள்ளன. அதிகமான வட்டி வீட்டுக்கடன் வாங்கியவர்களை அதிக அழுத்தத்தில் ஆழ்த்துகின்றது. இதற்கு முன்னர், 2014-15 நிதியாண்டில் வரி விலக்கு கோரக்கூடிய அதிகபட்ச வட்டி 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரம்பை 4 - 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என வரிசெலுத்துவோர் வலுவான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இது நடந்தால் வீட்டுக்கானுக்கான (Home Loan) EMI செலுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நிவாரண கிடைக்கும். 

மேலும் படிக்க | Budget 2024: சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் ஜாக்பட்... அடிப்படை வரி விலக்கு வரம்பில் மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More