Home> Business
Advertisement

1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்

Billionaire Award For Farmer: கோடீஸ்வரர் விருது பெறும் கர்நாடக விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்

1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்

மங்களூரு: ஓராண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் செய்ததற்காக மத்திய அரசின் ‘கோடீஸ்வர விவசாயி விருது’க்கு உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளரும், முற்போக்கு விவசாயிமான ரமேஷ் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 7-ம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை அவர் பெறுகிறார். கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், நாயக் 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து, ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளார்.

குந்தாப்பூர் தாலுகாவில் உள்ள தேக்கட்டேயைச் சேர்ந்த ரமேஷ் நாயக், தனது பண்ணை நிலத்தில் 500 டிராகன் பழ மரங்கள் தவிர 285 வகையான பலா மரங்களையும் வளர்த்துள்ளார். நாயக்கர் மழைநீர் குழியில் இருந்து அகற்றப்படும் சேற்றைப் பயன்படுத்தி 30,000 அன்னாசிச் செடிகளையும் வளர்த்து நல்ல லாபத்தைப் பெற்றுள்ளார்.

இதுபோன்ற முற்போக்கு விவசாயிகளை பாராட்டுவதன் மூலம், பிற விவசாயிகளுக்கும் ஊக்கம் கிடைக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு Billionaire Award  வழங்கி சிறப்பிக்கிறது.

மேலும் படிக்க | ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முட்டைகோஸ்! அருமைபெருமை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை தொழிலதிபரும், முற்போக்கு விவசாயியுமான ரமேஷ் நாயக், ஓராண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதை ஊக்குவிக்கப்படுகிறார். மத்திய அரசால் வழங்கப்படும் விருதை ரமேஷ் நாயக், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொள்வார்.

இயற்கை ஆர்வலரான ரமேஷ், கெடூர் கிராமத்தில் 13 ஏக்கர் நிலத்தில் 11 வகையான 1634 வகையான பழங்களை பயிரிட்டுள்ளார். அவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடும் பயிர்களுக்கு நல்ல லாபம் ஈட்டுகிறார். மழைநீர் குழியில் இருந்து அகற்றப்படும் சேற்றை பயன்படுத்தி 30000 அன்னாசி செடிகளை வளர்த்தார். அதேபோல, அவர் மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார்.

இது போன்ற முறைக்கு ஊடுசாகுபடி முறை என்று பெயர். ஓரே இடத்தில் பல பயிர்களை ஊடுபயிராக நடவு செய்து வேளாண்மை செய்யும் முறை நல்ல பலனளிக்கிறது. அன்னாசி மற்றும் பபாளியைப்போல, வாழை மரம் நடவு செய்த வயலில் பயறு, அல்லது வேர்க்கடலை போன்ற பயிர்கலை சாகுபடி செய்வார்கள். 

இரண்டு அன்னாசி செடிகளுக்கு இடையில் ஒரு பப்பாளி மரம் என்ற முறையில் பப்பாளி மற்றும் அன்னாசியை அவர் சாகுபடி செய்துள்ளார். டெங்கு சூர்யா, பிரகாஷ்சந்திரா, வியட்நாம் சூப்பர் அர்லி, சிங்கப்பூர் மற்றும் அத்தவரா போன்ற 285 வகையான பலா மரங்கள் உள்ளன. ரமேஷ் நாயக்கின் பரந்த விவசாய நிலத்தில் 500 டிராகன் பழ மரங்களும் வளர்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க | கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு! கேரட்டை விரும்பும் ஆரோக்கியம்! ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கேரட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More