Home> Business
Advertisement

500 நோட்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

Currency News Update: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

500 நோட்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

500 ரூபாய் நோட்டின் சமீபத்திய அப்டேட்: சமீபத்தில், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்ததை அடுத்து, தற்போது 500 ரூபாய் (500 rupees note) மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து பல வகையான செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தற்போது 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் (1000 rupees note) குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர், பிடிஐ இது குறித்து ட்வீட் வெளியிட்டு இந்த தகவலின் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2016 ஆம் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மாற்றும் சமீபத்தில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை நீக்க முடிவு எடுக்கப்பட்ட பிறகு, மக்கள் மனதில் பலவிதமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சக்திகாந்த தாஸ் வழங்கிய தகவல்
இதற்கிடையில் சமீபத்தில் பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ரூ.500 நோட்டை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நோட்டுகள் முழுவதுமாக புழக்கத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனுடன், தற்போது 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி மீண்டும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்

ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான 2000 ரூபாய் நோட்டுகளின் அச்சடிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் மத்தியிலான அதன் புழக்கமும் வெகுவாய் குறைக்கப்பட்டது. எஞ்சியிருந்த ரூபாய் நோட்டுகளே தற்போது வங்கிக்கு திரும்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதி வரை கால அவகாசம்
2,000 ரூபாய் கரன்சிகளை திரும்பப்பெறுவதாக அண்மையில் அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்படுவதில்லை என்றபோதும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுவதாக அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியது. அதன்படி செப்டம்பர் இறுதிக்குள் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள, 2000 ரூபாய் கரன்சிகளை தங்கள் வங்கி இருப்பில் செலுத்தலாம், அல்லது இதர மதிப்பிலான ரூபாய் தாள்களாக அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள நோட்டு 500 ரூபாய் நோட்டாக இருக்கும்
இதயனிடையே புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்ற வதந்திக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனுடன், 2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, இப்போது 500 ரூபாய் நோட்டுதான் நாட்டின் மிகப்பெரிய நோட்டாக இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது.

மேலும் படிக்க | RBI அளித்த ஜாக்பாட் செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்களுக்கு நிம்மதி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 
Read More