Home> Business
Advertisement

தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு

State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு

State Government Employees: தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

தமிழக அரசு ஊழியர்களில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயலில் உள்ளது. அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) கீழ் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity) வழங்கப்படுகின்றது.

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) வழங்கப்படுவதைப் போலவே மாநில அரசு ஊழியர்களுக்கும் (State Government Employees) கிராஜுவெட்டியாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஓய்வூதிய பணிக்கொடை (Retirement Gratuity) மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி (Death Gratuity) ஆகியவற்றுக்கான வரம்பை மத்திய அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலில் இருக்கும். 

மாநில அரசு ஊழியர்கள்

இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசும் மாநில அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடையை 25 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஓய்வுகால பணிக்கொடை உயர்வு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

இது குறித்து, தமிழக நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், "தமிழக அரசு கடந்த 2017-ல் வெளியிட்ட அரசாணைப்படி, ஓய்வுக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016 ஜனவரி 1-ம் தேதி கணக்கிட்டு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்துக்கு, ரூ.5 லட்சம் என்ற அளவில், அகவிலைப்படியின் அளவு 50 சதவீதத்தை தாண்டும்போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்கள், ஒய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஓய்வுக்கால பணிக்கொடை மற்றும் இறப்புக்கால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. 

இதன் அடிப்படையில், தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள். இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகள், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்ட்டுள்ளது.

மேலும் படிக்க | PPF கணக்கு இருக்கா? விதிகளில் முக்கிய மாற்றங்கள்: விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More