Home> Business
Advertisement

பெண்களுக்கு லாட்டரி.. வெறும் 2 வருடத்தில் பணக்காரர்களாகலாம்

Post Office Scheme: போஸ்ட் ஆஃபீஸ், பெண்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் 2 ஆண்டுகளில் பெரும் வருமானத்தைப் பெறலாம்.

பெண்களுக்கு லாட்டரி.. வெறும் 2 வருடத்தில் பணக்காரர்களாகலாம்

பெண்களுக்கான தபால் அலுவலகத் திட்டம்: பல வகையான சேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகம் அதாவது இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் பலவற்றில் முதலீடு செய்வதன் மூலம் மக்கள் நல்ல வருமானத்தைப் பெறலாம். அந்த வகையில் அஞ்சல் அலுவலகம் பெண்களுக்காக பல அற்புதமான திட்டங்களைக் கொண்டுள்ளது, அதில் முதலீடு செய்வதன் மூலம் அவர்களும் பெரிய பணத்தை சம்பாதிக்கலாம். எனவே இன்று நாம் ஒரு சிறப்பான தபால் அலுவலக திட்டத்தை பற்றி தான் காண உள்ளோம், இது பெண்களுக்கு நல்ல வருமானத்தை தருவதோடு நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்பையும் தரும். 

ஆம், தபால் அலுவலகத்தால் பெண்களுக்காக பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன, அவற்றில் ஒன்றைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். இதன் மூலம் பெண்கள் சிறு முதலீடுகளில் நல்ல லாபம் பெறலாம். வாருங்கள் பெண்களுக்கான சிறந்த தபால் அலுவலகத் திட்டத்தைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே

இதுதான் பெண்களுக்கான சிறந்த அஞ்சல் அலுவலகத் திட்டம்:
உண்மையில், இப்போது நாம் மகிளா சம்மான் சான்றிதழ் என்கிற அஞ்சல் அலுவலகத் திட்டத்தைப் பற்றி தான் காண உள்ளோம். இந்தத் திட்டத்தில், பெண்கள் சிறிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் சந்தை அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு உத்தரவாதமான ரிட்டர்ன் திட்டமாகும், இதில் எந்த சந்தை ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்து லாபத்தை பெண்கள் பெறலாம்.

Mahila Samman Saving Certificate Scheme (மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்):
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதன்படி பெண்களுக்கு இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். அது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதுள்ள வருமான வரி விதிகளின்படி மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழின் கீழ் உள்ள அனைத்து வருமானங்களுக்கும் வரி விதிக்கப்படும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் டிடிஎஸ் (மூலத்தில் வரிக் கழிக்கப்பட்டது) கழிக்கப்படாது.

2 வருடங்களில் பெண்கள் லட்சகளுக்கு சொந்தக்காரராகலாம்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் (Mahila Samman Saving Certificate Scheme Eligibility) கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் கணக்கு தொடங்கலாம். அவர்கள் விரும்பினால், பெண்கள் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்து 7.5 சதவீத வட்டியைப் பெறலாம். முதல் ஆண்டில் ரூ.15 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் ரூ.16,125ம் லாபம் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், 2 ஆண்டுகளுக்குள் ரூ.2 லட்சம் முதலீட்டில் திட்டத்தின் கீழ் ரூ.31,125 பலன் கிடைக்கும்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்:
பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் 2023 – 2024 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும். அதிகபட்சமாக ரூ. 2,0000 லட்சம் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வதி விரைவில்.. கணக்கில் வரும் அதிக தொகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More