Home> Business
Advertisement

வங்கி லாக்கரில் எந்த பொருட்களை வைக்கலாம்? எதை வைக்கக்கூடாது? தொலைந்தால் யார் பொறுப்பு?

Bank Locker Rules: வங்கி லாக்கரின் திருத்தப்பட்ட விதிகளின்படி, வங்கி லாக்கரை சரியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். 

வங்கி லாக்கரில் எந்த பொருட்களை வைக்கலாம்? எதை வைக்கக்கூடாது? தொலைந்தால் யார் பொறுப்பு?

Bank Locker Rules: பெரும்பாலும் மக்கள் தங்கள் நகைகள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் என பல வகையானவற்றை வங்கி லாக்கரில் வைக்கிறார்கள். இங்கு இவை அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் என நம்பப்படுகின்றது. எனினும், சில சமயம் இந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வுகளும் நடக்கின்றன. சமீபத்தில், உதய்பூரில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நோட்டுகளில் கரையான் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வங்கி லாக்கரில் (Bank Locker) எதை வைக்கலாம் என்ற விவாதம் மீண்டும் துவங்கியுள்ளது.

பெரும்பாலான பொது மக்கள், நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் கிளப்புகள் வங்கி லாக்கரின் சேவையை பெறுகின்றனர். லாக்கர்களில் தங்க-வைர நகைகள், பணம், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வைப்பது வழக்கம். சமீபத்தில், பெரும்பாலான வங்கிகள் லாக்கர் தொடர்பான ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி வாடிக்கையாளர்களிடம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறுமாறு வங்கி கிளைகளிடம் கூறியுள்ளன. 31 டிசம்பர் 2023க்குள் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். 

இந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைக்க முடியாது

எஸ்பிஐ (SBI) இணையதளத்தின்படி, வங்கி லாக்கரின் திருத்தப்பட்ட விதிகளின்படி, வங்கி லாக்கரை சரியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக நகைகள், ஆவணங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வைக்கலாம். ஆனால் ரொக்க பணத்தை, ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க லாக்கரை பயன்படுத்த முடியாது. பிஎன்பி -இன் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தின்படி, ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை வங்கி லாக்கரில் வைக்க முடியாது. 

மேலும் படிக்க | EPF தொகைக்கு வரி விதிக்கப்படுமா? ஓய்வுக்கு முன்னரே முழு பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?

மேலும், உருகும் அல்லது கதிரியக்க பொருட்களையும் எந்தவிதமான சட்டவிரோதமான பொருட்களையும் லாக்கரில் வைத்திருக்க முடியாது. வங்கி அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு பொருளையும் லாக்கரில் வைக்கக்கூடாது. "ரசாயனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் பிற ஆபத்தான, சட்டவிரோதமான பொருட்களை பாதுகாக்கப்பட்ட வங்கி லாக்கர்களில் வைக்க அனுமதி இல்லை." என  பிஎன்பி லாக்கர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கி லாக்கரில் பொருட்களை வைப்பது எப்படி?

காகிதங்கள் மற்றும் பிற பொருட்களை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க காற்று புகாத (ஜிப் செய்யப்பட்ட அல்லது சீல் செய்யப்பட்ட) பிளாஸ்டிக் பைகள் அல்லது பவுச்களை பயன்படுத்தலாம். காகித ஆவணங்களை நீண்ட காலம் நீடிக்க லேமினேட் செய்யலாம். நகைகளை லாக்கரில் பொருந்தும் அளவிலான ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கலாம். 

லாக்கரில் எந்த பொருட்களை வைக்கலாம்?

ஆவணங்கள், நகைகள், பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்கள், சேமிப்புப் பத்திரங்கள், இன்சூரன்ஸ் பாலிசிகள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய ரகசிய மற்றும் தனிப்பட்ட பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கலாம்.

வங்கிகள் எப்போது பொருட்களுக்கு பொறுப்பெற்கும்? 

வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியோ, அல்லது அவர்களது பொறுப்பிலிருந்து விலகியதாலோ, அல்லது மோசடி செயல்களாலோ இழப்பு ஏற்பட்டால், வங்கியின் பொறுப்பு வங்கி லாக்கரின் வாடகையின் நூறு மடங்குக்கு சமம். அதாவது, வங்கி அதிக தொகை செலுத்த வேண்டும். உதாரணமாக லாக்கர் வாடகை ரூ.2,000 என்றால், வங்கி ரூ.2,000க்கு 100 மடங்கு அதாவது ரூ.2,00,000 செலுத்தும்.

மேலும் படிக்க | 7th Pay Commission டபுள் ஜாக்பாட்: அடி தூள்... அகவிலைப்படியுடன் இதுவும் உயரும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More