Home> Business
Advertisement

PPF கணக்கு இருக்கா? விதிகளில் முக்கிய மாற்றங்கள்: விவரம் இதோ

PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

PPF கணக்கு இருக்கா? விதிகளில் முக்கிய மாற்றங்கள்: விவரம் இதோ

PPF Rule Change: சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்?

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிற திட்டங்களில் மாற்றங்கள் இருக்கும். தபால் நிலையங்கள் மூலம் சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்குகள் தொடர்பான வழிகாட்டுதலை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டுள்ளது. கணக்கை ஒழுங்குபடுத்த, இதற்கான வழிகாட்டியில் முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன், கணக்குகளுக்கான வட்டி மற்றும் முதிர்வு குறித்தும் இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி

- சிறார்கள் பெயரில் திறக்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு தொடர்பான தகவல்களும் இந்த வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ளன. 

- மைனர் பிபிஎஃப் கணக்கைப் (PPF Account) பொறுத்தவரை, இந்த கணக்குகளுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் (POSA) போன்ற வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- ஆனால் சிறார் 18 வயதை அடையும் போது, ​​இந்தக் கணக்கு முறைப்படுத்தலுக்குத் தகுதி பெறும்.

- அதாவது வட்டி PPF க்கு பொருந்தும் வட்டி விகிதத்தின் படி வழங்கப்படும்.

- அத்தகைய கணக்குகளின் முதிர்வு காலம் சிறார்கள், அதற்கான வயது வரம்பை எட்டிய நாளிலிருந்து கணக்கிடப்படும். 

- சிறார்களுக்கான PPF கணக்குகளை இந்திய குடிமக்கள் மட்டுமே திறக்க முடியும்.

- சிறார்களுக்கான PPF கணக்குகள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களில் ஒருவரால் மட்டுமே திறக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.
 
விதிகளில் ஏன் இந்த மாற்றம் செய்யப்பட்டது?

- கணக்குகள் ஒழுங்குபடுத்தப்படுவதை உறுதிசெய்யவும், வழிகாட்டுதல்களின்படி இல்லாத கணக்குகளைத் திறப்பதைத் தடுக்கவும் சிறுசேமிப்புத் திட்டம் மற்றும் PPF தொடர்பான இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 
- சிறு சேமிப்பு திட்ட முதலீட்டாளர்கள் திட்டத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். 
- திட்டங்களை தெளிவுபடுத்துவதும், ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட சிறு சேமிப்புக் கணக்குகளை முறைப்படுத்துவதற்கான நியாயமான மற்றும் சரியான உத்தரவை ஏற்படுத்துவதும் இந்த புதிய வழிகாட்டுதலின் நோக்கமாகும்.

மேலும் படிக்க | EPS Pension Rule: ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி... புதிய விதிகளால் நிவாரணம்

ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் இருந்தால் என்ன விதி இருக்கும்?

(i) ஒவ்வொரு வருடத்திற்கும் பொருந்தக்கூடிய உச்சவரம்புக்குள் வைப்புத் தொகை இருந்தால், முதன்மைக் கணக்குக்கு திட்டத்திற்கான வட்டி விகிதம் கிடைக்கும். (முதன்மைக் கணக்கு என்பது, தபால் அலுவலகம்/ஏஜென்சி வங்கியில் முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கணக்குகளில் ஒன்றாகும். முதலீட்டாளர் முறைப்படுத்தப்பட்ட பிறகு தொடர விரும்பும் கணக்கு முதன்மைக் கணக்காக கருதப்படும்.)

(ii) ஒவ்வொரு ஆண்டும் பொருந்தக்கூடிய முதலீட்டு உச்சவரம்பிற்குள் முதன்மை கணக்கு இருக்கும் பட்சத்தில், இரண்டாவது கணக்கின் மீதித் தொகை முதல் கணக்குடன் இணைக்கப்படும். இணைப்பிற்குப் பிறகு, முதன்மைக் கணக்கு நடைமுறையில் உள்ள திட்ட வட்டி விகிதம் தொடர்ந்து கிடைக்கும். இரண்டாவது கணக்கில் அதிகப்படியான இருப்பு இருந்தால், பூஜ்ஜிய சதவீத வட்டியுடன் இது திருப்பி அளிக்கப்படும்.

(iii) முதன்மை மற்றும் இரண்டாவது கணக்கைத் தாண்டிய கூடுதல் கணக்குகளுக்கு, அந்தக் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து பூஜ்ஜிய சதவீத வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More