Home> Business
Advertisement

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; உங்கள் EMI தொகையில் மாற்றம் ஏற்படலாம்...

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) மீண்டும் அதன் கட்டணங்களை குறைத்துள்ளது. அதாவது SBI நிதி கடன் விகிதத்தின் (MCLR) விளிம்பு செலவை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; உங்கள் EMI தொகையில் மாற்றம் ஏற்படலாம்...

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) மீண்டும் அதன் கட்டணங்களை குறைத்துள்ளது. அதாவது SBI நிதி கடன் விகிதத்தின் (MCLR) விளிம்பு செலவை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த விலக்கு அனைத்து வகையான காலங்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. புதிய விகிதத்திற்குப் பிறகு, SBI-யின் MCLR ஒரு வருடத்திற்கு 7.00 சதவீதமாகக் குறைந்துள்ளது. முன்னதாக இந்த விகிதம் ஒரு வருடத்திற்கு 7.25 சதவீதமாக இருந்தது. புதிய விகிதங்கள் 2020 ஜூன் 10 முதல் நடைமுறைக்கை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விவரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்; எச்சரிக்கும் SBI வங்கி...

SBI தொடர்ந்து 13-வது முறையாக MCLR-ல் இந்த விலக்கு அறிவித்துள்ளது. இது தவிர, வங்கி அதன் அடிப்படை வீதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பை அடுத்து புதிய விகிதம் 7.40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடிப்படை வீதம் 8.15 சதவீதமாக இருந்தது. 

மேலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI), ரெப்போ வீதத்தில் 0.40 சதவீதம் குறைப்பதன் முழு நன்மையையும் கடன் வாங்குபவர்களுக்கு வழங்கியுள்ளது. வெளிப்புற பெஞ்ச்மார்க் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தின் (EBR) அடிப்படையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தில் (RLLR) கடன் வாங்கியவர்களும் பயனடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக SBI, EBR மற்றும் RLLR இரண்டின் விகிதங்களையும் 0.40 சதவீதம் குறைத்துள்ளது. EBR ஆண்டுதோறும் 6.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 7.05 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் 2020 ஜூலை 1 முதல் பொருந்தும். இதேபோல், RLLR முந்தைய 6.65 சதவீதத்திலிருந்து ஆண்டுக்கு 6.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதம் 2020 ஜூன் 1 முதல் பொருந்தும்.

SBI மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான செய்தி காத்திருக்கிறது...

EMI தொக்கைக்கு இத்தகைய நிவாரணம் பொருந்துமா?

MCLR- உடன் தொடர்புடைய 30 ஆண்டுகளுக்கு ரூ.25 லட்சம் வீட்டுக் கடனுக்கு EMI-யில் ரூ.421 நிவாரணம் கிடைக்கும். இதேபோல், EBR / RLLR உடன் இணைக்கப்பட்ட அதே தொகை வீட்டுக் கடனின் EMI-ல் ரூ.660 சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More