Home> Business
Advertisement

Indri Whisky வென்ற விருதினால்.... எகிறும் பிக்காடிலி ஆக்ரோ பங்கு விலைகள்!

உலகம் முழுவதும் மேற்கத்திய நாடுகள் பல நூற்றாண்டுகளாக மது பான உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இண்ட்ரி விஸ்கி (Indri Single Malt Indian Whiskey) உலகின் சிறந்த விஸ்கி என்ற விருதை வென்றுள்ளது.

Indri Whisky வென்ற விருதினால்....  எகிறும் பிக்காடிலி ஆக்ரோ பங்கு விலைகள்!

இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் இப்போது இந்திய மதுபான நிறுவனங்களும் அதிசயங்களைச் செய்து வருகின்றன. இந்திய விஸ்கி பிராண்ட் ஒன்று உலகின் சிறந்த விஸ்கி விருதை பெற்றுள்ளது. அதன் பிறகு அதன் பங்குகள் விலை அதிகரித்ததை தொடர்ந்து, அதன் பங்குகளை வாங்க பலர் முண்டியடித்து வருகின்றனர்.

உண்மையில், இண்ட்ரி சிங்கிள் மால்ட் இந்திய விஸ்கி உலகின் சிறந்த விஸ்கி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. இண்ட்ரி விஸ்கிக்கு 2023 ஆம் ஆண்டில் 'விஸ்கி ஆஃப் தி வேர்ல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த விஸ்கியை தயாரித்த பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வருகின்றன. புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக, பங்குச் சந்தையின் அதன் மதிப்பு 20 சதவீத உயர்வை எட்டியது.

இண்ட்ரி விஸ்கியின் விருதை தொடர்ந்து, அதனை தயாரித்த  இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் இரண்டே நாட்களில் பணக்காரர்கள் ஆனார்கள். இந்த இரண்டு நாட்களில், கையிருப்பு 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. பிக்காடிலி அக்ரோ (Piccadily Agro Inds Limited) பங்கின் செயல்திறனைப் பற்றி நாம் பேசினால், இந்த பங்கு செப்டம்பர் 29 அன்று ரூ.115 ஆக இருந்தது. அதன்பிறகு விருது கிடைத்த செய்தி வந்து சிறிது நேரத்தில் பங்கு ச் சந்தையில் (Share Market), பிக்காடிலி அக்ரோ பங்கு விலைகள்,  ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.. அக்டோபர் 3ம் தேதி, பங்குகளில் 20 சதவீதம் உயர்வு பதிவாகியுள்ளது. அதேசமயம் அக்டோபர் 4ஆம் தேதியும் பங்கு விலை அதிகரிப்பி தொடர்கிறது. இரண்டு நாட்களில் பங்கு விலை ரூ.165 ஆக அதிகரித்துள்ளது.

பிராண்ட் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு

பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் பங்கு கடந்த 6 மாதங்களில் 242 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. அதே சமயம், இந்த ஆண்டு இதுவரை 270 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில், அதன் முதலீட்டாளர்களுக்கு 349 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளில், 1530 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை அளித்து முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கியுள்ளது.

நிறுவனத்தின் இந்திய விஸ்கி இண்ட்ரி தீபாவளி கலெக்டரின் பதிப்பு 2023 ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான விஸ்கி ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளில் 'பெஸ்ட் இன் ஷோ, டபுள் கோல்ட்' என்ற பட்டத்தை வென்றுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த விஸ்கியின் மீது மோகம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்ட் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்பது தான் சிறப்பு. அதேசமயம், மேற்கத்திய நாடுகள் பல நூற்றாண்டுகளாக மது பான உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த விருது மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

1 லட்சம் மதிப்பிலான பங்கின் மதிப்பு 65 கோடி

பிக்காடிலி ஆக்ரோ பங்குகள் அற்புதமான வருமானத்தை அளித்துள்ளன. ஜூலை 11, 1997 அன்று, இந்த பங்கின் விலை 25 பைசா மட்டுமே, அது இப்போது ரூ.165 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1997-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் முதலீடு இப்போது ரூ.65.20 கோடியாக அதிகரித்திருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் பங்கு 65100 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்த விஸ்கி எங்கே கிடைக்கும்?

இந்தியாவில் மதுபானங்களின் விலைகள் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. இந்திரி விஸ்கி தற்போது இந்தியாவின் 19 மாநிலங்களிலும், உலகின் 17 நாடுகளிலும் கிடைக்கிறது. இந்த விஸ்கியின் சிறப்பு என்னவென்றால், இரண்டு வருடங்கள் முன் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இது 14 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பிக்காடில்லி டிஸ்டில்லரீஸ் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் ஹரியானாவில் முதன்முறையாக இதை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை ஹரியானாவில் உள்ளது.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More