Home> Business
Advertisement

mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?

mAadhaar மொபைல் பயன்பாடு Android மற்றும் iOS இல் கிடைக்கிறது. mAadhaar செயலியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்தும் இயக்கப்படலாம்.

mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?

mAadhaar கார்டு: ஆதார் அட்டையின் முக்கியத்துவம் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, UIDAI குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது, இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டு தொடர்பான பணிகளை நீங்கள் எங்கும், எந்த நேரத்திலும் செய்துக்கொள்ல முடியும். உங்கள் ஆதார் தொடர்பான பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அத்தகைய மொபைல் செயலியைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். ஆம், நாங்கள் mAadhaar மொபைல் பயன்பாட்டைப் பற்றி பேசுகிறோம். mAadhaar மொபைல் பயன்பாடு Android மற்றும் iOS இல் கிடைக்கிறது. mAadhaar செயலியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்தும் இயக்கப்படலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே அனைத்து அம்சங்களையும் பெற முடியும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் mAadhaar செயலியைப் பயன்படுத்தினால், இந்த செயலியில் கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணில் பயன்படுத்தப்படும் மொபைல் போனில் mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்தால், இந்த செயலியின் அனைத்து அம்சங்களையும் உங்களால் பயன்படுத்த முடியாது. உண்மையில், mAadhaar மொபைல் செயலியை முழுமையாகப் பயன்படுத்த, உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTPயை உள்ளிட்ட பிறகு, mAadhaar செயலியின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Aadhaar Centre: உங்கள் வீட்டின் அருகில் ஆதார் மையம் எங்குள்ளது? கண்டறிவது எப்படி?

மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டாலும் இந்த அம்சங்களைப் பயன்படுத்தலாம்
அதுவே பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணுடன் mAadhaar மொபைல் செயலியைப் பயன்படுத்தினால், ஆதார் மறுபதிப்புக்கு ஆர்டர் செய்தல், அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுதல், ஆதார் சரிபார்ப்பு, QR குறியீடு ஸ்கேன் போன்ற அம்சங்களைப் பெறலாம். இந்த செயலியை பதிவு செய்யாத மொபைல் எண்ணிலிருந்து பயன்படுத்தலாமா, வேண்டாமா என்று பலர் mAadhaar செயலியைப் பற்றி இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். எனவே பதிவு செய்யாத மொபைல் எண்ணிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்பதே இதற்கான பதிலாகும். அந்த வகையில் பதிவுசெய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்து இந்த பயன்பாட்டின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் அணுக முடியாது, அதேசமயம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் நீங்கள் 35 க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More