Home> Business
Advertisement

7th Pay Commission: ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி, 18 மாத டிஏ! முழு விவரம்!

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, இதற்கு முன்னர் ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.  

7th Pay Commission: ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி, 18 மாத டிஏ! முழு விவரம்!

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் எதிர்பார்ப்புப்படி அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது, இம்முறை 4% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்-தொழில்துறை தொழிலாளர்களின் தரவுகள் வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல உயர்வு இருக்கும் என்பது உறுதியானது.  AICPI-IW முதல் பாதிக்கான தரவை வெளியிட்டது, இதில் குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்து 129.2 ஆக இருந்தது.  அகவிலைப்படி 4% உயர்த்தப்படும்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள்.

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, இதற்கு முன்னர் ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.  இந்த அகவிலைப்படியானது இந்த ஆண்டு செப்டம்பர் மாத சம்பளத்தில் வழங்கப்படும், அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட டிஏ ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும்.

fallbacks

மேலும் படிக்க | Dearness allowance: ஊழியர்களின் சம்பளத்தில் இவ்வளவு மாற்றங்களா?

 

முதல் பாதியின் புள்ளிவிவரங்களின் அடிப்படியில், ஜூன் மாதத் தரவைச் சேர்த்ததன் மூலம் குறியீடு இப்போது 129.2 ஐ எட்டியுள்ளது.  மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு 129 புள்ளிகளாக இருந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத பலனைப் பெறுவார்கள்.  பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900 எனில் புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம் ஆகும், இதுவரை இருந்த அகவிலைப்படி (34%) ரூ 19,346/மாதம் எனில் தற்போது ரூ.2260/மாதம் அதிகரித்துள்ளது, இதன்மூலம் ஆண்டு ஊதிய உயர்வு ரூ.27,120 கிடைக்கும்.  குறைந்தபட்சமாக பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000 எனில், புதிய அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம் ஆகும், இதுவரை இருந்த அகவிலைப்படி (34%) ரூ.6120/மாதம் எனில் தற்போது அகவிலைப்படி ரூ.1080/மாதம் அதிகரித்துள்ளது.  இதன்மூலம் ஆண்டு சம்பளமாக ரூ.8640 கிடைக்கும்.

மேலும் படிக்க | 8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More