Home> Business
Advertisement

அடி தூள்!! அகவிலைப்படியை தொடர்ந்து HRA அதிரடி உயர்வு: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

7th Pay Commission, HRA Hike: இந்தியாவில் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை முறையே 3 சதவீதம், 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

அடி தூள்!! அகவிலைப்படியை தொடர்ந்து HRA அதிரடி உயர்வு: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

7th Pay Commission, HRA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் சமீபத்தில் மிகப்பெரிய பரிசை அளித்தது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (டிஆர்) 46% -இலிருந்து 50% ஆக அதிகரிக்கப்பட்டது. வியாழக்கிழமை (மார்ச் 7, 2024) மாலை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு இந்த பரிசை அளித்தது. மேலும் பணிக்கொடைக்கான வருமான வரி விலக்கு வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளைத் தவிர, இந்தியாவில் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) முறையே 3 சதவீதம், 2 சதவீதம் மற்றும் ஒரு சதவீதம் என அரசாங்கம் உயர்த்தியுள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance)

எச்ஆர்ஏ உயர்விற்குப் பிறகு, X வகை நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) HRA அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்கும். இந்த ஹெச்ஆர்ஏ அதிகரிப்பால், அரசுக்கு ரூ.9,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.

வெவ்வேறு நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவில் ஏற்பட்ட அதிகரிப்பை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

7th Pay Commission: புதிய HRA வரம்புகள்

மத்திய அரசு ஊழியரின் HRA அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்தது. தற்போது X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் அதிகபட்சமாக 27 சதவிகித HRA -ஐ பெற்று வருகிறார்கள். HRA அதிகரிப்புக்கு பிறகு இது 30 சதவீதமாக உயரும். அடுத்த வகையான Y வகை நகரங்களில் பணியாளர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதமாக உள்ளது. இது இப்போது 20 சதவிகிதமாக அதிகரிக்கும். அடுத்த பிரிவான Z பிரிவு ஊழியர்களுக்கு தற்போது 9 சதவிகித வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கிறது. இது இப்போது 10 சதவிகிதமாக உயரும். 

7th Pay Commission: வீட்டு வாடகை கொடுப்பனவுக்கான நகர வகைப்பாடு

HRA Hike: X பிரிவு நகரங்கள்:

டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் எக்ஸ் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | PF Withdrawal Rules: உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி?

HRA Hike: Y பிரிவு நகரங்கள்

பாட்னா, லக்னோ, விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, கவுஹாத்தி, சண்டிகர், ராய்ப்பூர், ராஜ்கோட், ஜாம்நகர், வதோதரா, சூரத், ஃபரிதாபாத், காசியாபாத், குர்கான், நொய்டா, ராஞ்சி, ஜம்மு, ஸ்ரீநகர், குவாலியர், இந்தூர், போபால், ஜபல்பூர், உஜ்ஜைன், கோலாப்பூர், அவுரங்காபாத், நாக்பூர், சாங்லி, சோலாப்பூர், நாசிக், நாந்தேட், பிவாடி, அமராவதி, கட்டாக், புவனேஸ்வர், ரூர்கேலா, அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பிகானேர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, அஜ்மீர், மொராத் பாரே , அலிகார், ஆக்ரா, லக்னோ, கான்பூர், அலகாபாத், கோரக்பூர், ஃபிரோசாபாத், ஜான்சி, வாரணாசி மற்றும் சஹாரன்பூர்  போன்ற நகரங்கள் Y பிரிவில் உள்ளன.

HRA Hike:  Z பிரிவு நகரங்கள்

X மற்றும் Y வகை நகரங்களைத் தவிர, மற்ற அனைத்து நகரங்களும் Z பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் எச்ஆர்ஏ வழங்கப்படுகின்றது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டங்கள்: அற்புதமான வருமானத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More